நாடாளுமன்ற கூட்டத்தொடர் முதல் நாள் ; 30 எம்பிக்கள் 50 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் 30 எம்பிக்கள் 50 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி:
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியபோது, சுமார் 30 எம்.பி.க்கள் மற்றும் நாடாளுமன்றத்தின் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற அமர்வுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய கொரோனா பரிசோதனைகளில் சுமார் 30 எம்.பி.க்கள் மற்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை செயலகங்களின் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
இதில் 17 எம்.பிக்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது சோதனை முடிவுகளில் கொரோனா தொற்று உள்ள அனைவருமே தனிமைப்படுத்தலின் கீழ் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர், பாராளுமன்றத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
அறிக்கையின்படி, இந்த 17 எம்.பி.க்களில் 12 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள், இருவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள், தலா ஒருவர் சிவசேனா, திமுக மற்றும் ஆர்.எல்.பி. கட்சியை சேர்ந்தவர் ஆவார்கள்.
Related Tags :
Next Story