கனடா பிரதமர் ஜஸ்ட்டின் இந்தி தெரியாது போடா என்ற டி சர்ட்டை அணிந்தது உண்மையா...?


கனடா பிரதமர் ஜஸ்ட்டின் இந்தி தெரியாது போடா என்ற டி சர்ட்டை அணிந்தது உண்மையா...?
x
தினத்தந்தி 15 Sep 2020 1:53 AM GMT (Updated: 15 Sep 2020 1:53 AM GMT)

கனடா பிரதமர் ஜஸ்ட்டின் இந்தி தெரியாது போடா என்ற டி சர்ட்டை அணிந்தது உண்மையா என்ன என்பது தெரியவந்துள்ளது.

புதுடெல்லி

கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ தமிழர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பார்த்து கொண்டிருக்கமாட்டேன் என்று கூறியதுமட்டுமின்றி, இந்தி தெரியாது போடா என்ற டி சர்ட்டை அவர் கையில் பிடித்திருப்பது போன்ற வைரலாகும் புகைப்படத்தின் உண்மை என்ன என்பது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில், கடந்த ஒருமாத காலமாக இந்தி திணிப்பு குறித்த விவகாரம் தீவிரமாக எழுந்துவருகின்றன. சென்னை விமான நிலையில் தி.மு.க எம்.பி கனிமொழியிடம் சி.ஐ.எஸ்.எப் அதிகாரி, இந்தியராக இருந்துகொண்டு இந்தி தெரியாதா என்று கேள்வி எழுப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், காவிரி நடுவர் மன்ற செயல்பாடு குறித்து ஆர்.டி.ஐயில் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இந்தியில் மட்டும் பதிலளித்துள்ளது. இந்த விவகாரங்கள் தமிழகத்தில் இந்தித் திணிப்பு குறித்த விவாதங்களைக் கிளப்பியுள்ளது

மத்திய அரசு இந்தியைத் திணித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் தமிழ் திரைப் பிரபலங்கள் இந்தி தெரியாது போடா மற்றும் தமிழ் பேசும் இந்தியன் போன்ற டி-சர்ட்டுகள் அணிந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் இணையத்தில் வைரலானது. இந்த டி-சர்ட் கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதுடன் பலரும் இத்தகைய ஆடைகளை அணிய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தி தெரியாது போடா எனும் வாசகம் அடங்கிய டி ஷர்ட்டை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.ஆனால், அது உண்மை இல்லை, போட்டோ ஷாப் மூலம் எடிட் செய்யப்பட்டது எனவும், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தடுப்பு மருந்து குறித்து Vaccines are safe, and save lives. Love this shirt, thanks என்ற வாசகத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த மே 30, 2019-ஆம் ஆண்டு பதிவிட்ட புகைப்படம் தான் இது என்பது தெரியவந்துள்ளது.




Next Story