கொரோனா பாதிப்பில் ரஷ்யாவையும், இறப்பு எண்ணிக்கையில் ஸ்பெயினையும் பின்னுக்கு தள்ளிய மராட்டியம்


கொரோனா பாதிப்பில் ரஷ்யாவையும், இறப்பு எண்ணிக்கையில் ஸ்பெயினையும் பின்னுக்கு தள்ளிய மராட்டியம்
x
தினத்தந்தி 15 Sept 2020 9:18 AM IST (Updated: 15 Sept 2020 9:18 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பில் ரஷ்யாவையும், இறப்பு எண்ணிக்கையில் ஸ்பெயினையும் பின்னுக்கு தள்ளியது மராட்டியம்.

மும்பை,

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் மாராட்டிய மாநிலத்தில் தான் ஆரம்பத்திலிருந்தே கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. 

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ரஷ்யாவில் பாதித்தவர்களை விட அதிகமாகி உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ரஷ்யாவில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 10,68,320 ஆக உள்ளது. ஆனால் அதைவிட அதிகமாக மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,77,374 ஆக உள்ளது.

அதேபோல் மராட்டியத்தில் கொரோனா இறந்தவர்களின் எண்ணிக்கை ஸ்பெயின் நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகி உள்ளது. அதாவது ஸ்பெயினில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,848 ஆக உள்ளது. ஆனால் மராட்டியத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,894 ஆக உள்ளது.

உலக நாடுகளை விட இந்தியாவில் உள்ள ஒரே ஒரு மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story