கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் 25 ந்தேதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கா...? மத்திய அரசு விளக்கம்


கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் 25 ந்தேதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கா...? மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 15 Sept 2020 9:33 AM IST (Updated: 15 Sept 2020 9:33 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவை கட்டுப்படுத்த 25ந்தேதி முதல் மீண்டும் 46 நாட்கள் கடுமையான ஊரடங்கு என வெளீயான போலியான தகவல்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.

புதுடெல்லி

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு மத்தியில், நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க செப்டம்பர் 25 முதல் மற்றொரு 46 நாட்கள் ஊரடங்கு  பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை மத்திய அரசு  நிராகரித்து உள்ளது. இந்த செய்தியை பத்திரிகை தகவல் பணியகம் "போலி செய்தி" எச்சரிக்கையுடன் ஒரு இடுகையில் மறுத்து உள்ளது.

இந்தநிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) செப்டம்பர் 25 முதல் மற்றொரு பூட்டுதலை விதிக்க மையத்தை பரிந்துரைத்ததாக வெளியான தகவல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டன, மேலும் என்.டி.எம்.ஏவின் உத்தரவு என்று கூறும் ஸ்கிரீன் ஷாட் ஒன்று வெளியானது. அதில்

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், நாட்டில் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், திட்டக் கமிஷனுடன் இணைந்து,  இந்திய அரசைக் கேட்டு  பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துகிறது.

செப்டம்பர் 25, 2020 நள்ளிரவு முதல் தொடங்கி 46 நாட்கள் கண்டிப்பாக நாடு தழுவிய ஊரடங்கை மீண்டும் விதிக்க வேண்டும். நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகச் சங்கிலியைப் பராமரித்தல்  குறித்து இதன்மூலம் திட்டமிட என்.டி.எம்.ஏ அமைச்சகத்திற்கு முன் அறிவிப்பை வெளியிடுகிறது என அதில் கூறப்பட்டு இருந்தது.

இது குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உத்தரவு போலியானது என்று பத்திரிகை தகவல் பணியகம்  டுவீட் செய்து உள்ளது.

செப்டம்பர் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கு மீண்டும் விதிக்குமாறு அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ள ஒரு உத்தரவு கூறுகிறது. பிஐபி உண்மை சோதனையில் இந்த உத்தரவு போலியானது. மீண்டும் ஊரடங்கு குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அத்தகைய எந்த உத்தரவையும் வெளியிடவில்லை பிஐபி டுவீட் செய்து உள்ளது.

Next Story