ஜம்மு பகுதியில் 8 மாதங்களில் பாகிஸ்தானால் 3,186 போர்நிறுத்த மீறல்கள்
ஜம்மு பகுதியில் 8 மாதங்களில் பாகிஸ்தானால் மொத்தம் 3,186 போர்நிறுத்த மீறல்கள் பதிவாகியுள்ளன.
புதுடெல்லி
திங்களன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், ஜனவரி 1 முதல் செப்டம்பர் 7 வரை ஜம்மு பிராந்தியத்தில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில் 3,186 போர்நிறுத்த மீறல்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது இந்த ஆண்டு பாகிஸ்தானின் போர்நிறுத்த மீறல்கள் ஏற்கனவே 17 ஆண்டுகளை எட்டியுள்ளது.
ஜம்மு பகுதியில் நடப்பாண்டின் 8 மாதங்களில் இருந்து நேற்றுவரை 3 ஆயிரத்து 186 முறை கட்டுப்பாட்டுக் கோட்டில் (கட்டுப்பாடு) பாகிஸ்தானால் மொத்தம் 3,186 போர்நிறுத்த மீறல்கள் பதிவாகியுள்ளன.17 ஆண்டுகளில் இந்த ஆண்டு அதிக போர்நிறுத்த மீறல்கள் நடைபெற்று உள்ளன.
இந்த ஆண்டு (2020 ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரை) ஜம்மு பிராந்தியத்தில் இந்தியா-பாக் சர்வதேச எல்லையில் 242 எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.செப்டம்பர் 7 ஆம் தேதி வரை யுத்த நிறுத்த மீறல் தொடர்பான சம்பவங்களில் எட்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானிய தரப்பில் இருந்து தூண்டப்படாத ஆத்திரமூட்டலுக்கு இந்திய இராணுவமும் கடுமையான பதிலடி கொடுத்துள்ளன.
பெரும்பாலான தாக்குதல்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே நடந்ததாகவும், பாகிஸ்தான் பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டபோது தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் கூறினார்
Related Tags :
Next Story