முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்


முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்
x
தினத்தந்தி 15 Sep 2020 2:48 PM GMT (Updated: 15 Sep 2020 2:48 PM GMT)

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை கலந்தாய்வை 15 நாட்களுக்கு நீட்டிக்க கோரி தமிழக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது.

புதுடெல்லி,

மருத்துவ படிப்புகளில் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்திக்கோரிய மனு நிலுவையில் இருப்பதால், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை 15 நாட்கள் நீட்டிக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற போது மத்திய அரசு சார்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், தற்போது தமிழகத்துக்கு கால நீட்டிப்பு அளித்தால், அதைபோல் பிற மாநிலங்களும் கலந்தாய்வு கடைசி தேதியை நீட்டிக்க கோருவார்கள் என்பதால் கூடுதல் கால அவகாசம் வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Next Story