அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பீமா காண்டுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பீமா காண்டுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,
இடாநகர்,
அருணாச்சல பிரதேச முதல்-மந்திரி பீமா காண்டுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது,
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன் அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனக்கு கொரோனாவுக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை, தற்போது ஆரோக்கியமாக உள்ளேன். எவ்வாறாயினும், பிறரின் பாதுகாப்புக்காக, நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன், என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story