மேற்கு வங்கத்தில் மேலும் 3,227-பேருக்கு கொரோனா தொற்று
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் மேலும் 3,227-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 59 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 09 ஆயிரத்து 146- ஆக உள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 81 ஆயிரத்து 142- ஆக உள்ளது. 23 ஆயிரத்து 942 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 4 ஆயிரத்து 62 பேர் தொற்று பாதிப்பால் அம்மாநிலத்தில் உயிர் இழந்துள்ளனர்.
Related Tags :
Next Story