நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9 சதவீதம் சரியும்; ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு
நடப்பு நிதியாண்டில், இந்திய பொருளாதாரம் 4 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கடந்த ஜூன் மாதம் கணித்து இருந்தது. இந்நிலையில், 9 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று நேற்று கணித்தது.
புதுடெல்லி,
கொரோனா தாக்கம் காரணமாக, தனிநபர்கள் செலவிடுவது குறைந்ததால், பொருளாதார வளர்ச்சி விகிதமும் குறையும் என்று அவ்வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் யாசுயுகி சவடா தெரிவித்தார்.
அதே சமயத்தில், வர்த்தக நடவடிக்கைகள் வேகம் எடுத்துள்ளதால், அடுத்த நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடையும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.
Related Tags :
Next Story