பெங்களூரு-டெல்லி இடையே கிசான் ரெயில் சேவை - தென்மேற்கு ரெயில்வே தகவல்


பெங்களூரு-டெல்லி இடையே கிசான் ரெயில் சேவை - தென்மேற்கு ரெயில்வே தகவல்
x
தினத்தந்தி 16 Sept 2020 6:22 AM IST (Updated: 16 Sept 2020 6:22 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு-டெல்லி இடையே கிசான் ரெயில் சேவை தொடங்குகிறது என்று தென்மேற்கு ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு-டெல்லி இடையே கிசான் ரெயில் சேவை வருகிற 19-ந் தேதி தொடங்குவதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், கடந்த 2020-21-ம் ஆண்டு பட்ஜெட்டில், கிசான் ரெயில் இயக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி கர்நாடகம்-டெல்லி இடையே கிசான் ரெயில் சேவை வருகிற 19-ந் தேதி இயக்கப்படும் என்று தென்மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் முதல் கிசான் ரெயில் சேவை வருகிற 19-ந் தேதி பெங்களூருவில் இருந்து தொடங்குகிறது. இந்த ரெயில் பெங்களூரு-டெல்லி இடையே ஓடும். இதில் பொருட்கள், நுகர்வோர் சரக்குகள் கொண்டு செல்லப்படும். பெங்களூருவில் இருந்து புறப்படும் இந்த ரெயில் மைசூரு, உப்பள்ளி, புனே வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் வழியில் நிற்கும் பகுதிகளில் சரக்கு ஏற்றுதல் மற்றும் இறக்குதல் செய்ய அனுமதிக்கப்படும்.

இந்த ரெயிலில் அதிக திறன் கொண்ட சரக்கு பெட்டிகள், ஒரு ஜெனரேட்டர் பெட்டி, ஒரு மாற்றுத்திறன் கொண்ட 2-ம் வகுப்பு சரக்கு பெட்டி ஆகியவை இருக்கும். இந்த கிசான் ரெயில் சேவை வருகிற அக்டோபர் 19-ந் தேதி வரை இயக்கப்படும்.

இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

Next Story