ஆசிரியர் திறனுக்கான புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
ஆசிரியர் திறனுக்கான புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாட்டில், 1986-ல் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கை, இதுவரை அமலில் இருந்தது. இதற்கு மாற்றாக மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் உயர் கல்வியில், பல்வேறு சீர்திருத்தங்களுடன் உருவாகியுள்ள, புதிய தேசிய கல்விக் கொள்கை, துடிப்பான, சமமான மற்றும் அறிவு மிக்க சமுதாயத்தை உருவாக்க பாடுபடும் என்றும், நம் நாட்டினை, உலகளாவிய வல்லரசாக மாற்றும் முயற்சியில் நேரடியாக பங்கேற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்த புதிய தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு வகுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story