லடாக் பகுதியில் சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை கையாளும் சீனா


லடாக் பகுதியில் சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை கையாளும் சீனா
x
தினத்தந்தி 16 Sep 2020 10:33 AM GMT (Updated: 16 Sep 2020 3:17 PM GMT)

லடாக் பகுதியில் எதிரியை சண்டையிடாமல் அடிபணிய வைக்கும் போர்த்தந்திர முறையை இந்திய வீரர்களுக்கு எதிராக கையாள தொடங்கி உள்ள சீன ராணுவம்

புதுடெல்லி

சீன இராணுவ போர்த்தந்திரம் குறித்து சன் சூ என்ற சீன எழுத்தாளரின் புகழ்பெற்ற புத்தகமான “ஆர்ட் ஆஃப் வார்” சூ இந்த் புத்தகத்தை கிமு 6 ஆம் நூற்றாண்டில் எழுதினார்.

போரின் மிகச்சிறந்த கலை எதிரியை சண்டையிடாமல் அடிபணிய வைப்பதாகும். சீன இராணுவம் (பி.எல்.ஏ) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஊதுகுழல்கள் லடாக் மற்றும் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவத்திற்கு எதிராக அதே உளவியல் போரின் தந்திரங்களை இன்றும் பயன்படுத்தி வருகின்றன.

ஆகஸ்ட் 29-30 அன்று இந்திய இராணுவம் பாங்காங் த்சோவுக்கு தெற்கே ரெசாங் லா-ரெச்சின் லா ரெட்லைன் மீது சீன  ராணூவத்தை முந்தி  ஏரியின் வடக்குக் கரையில் விரல் 4 உயரங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்காக தனது படைகளை மாற்றியமைத்தது. சீன இராணுவம் டாங்கிகள் மற்றும் காலாட்படை போர் வாகனங்களில் நகர்த்துவதன் மூலம் முதலில் இராணுவ ரீதியாக முயற்சித்தது. இரு கரைகளிலும் எல்லை சிவப்புக் கோடு மீறப்பட்டால் பதிலடி இருக்கும் என்று இந்திய ராணுவம் தெளிவுபடுத்தியது.

பாங்காங் த்சோவின் தென் கரையில், சீன ஒலிபெருக்கிகள் இந்திய ராணுவத்திற்கு தூய்மையான இந்தியில், குளிர்காலத்தில் இந்த உயரங்களில் இருப்பது  இந்திய அரசியல்வாதிகளின் விருப்பங்களையும் ஆர்வங்களையும் கருத்தில் கொண்டு பயனற்றவை என அவ்வபோது பிரசாரம் செய்து வருகின்றனர். பஞ்சாபி பாடல்களையும் ஒலிபரப்பி வருகின்றனர்.

சீனாவின் இந்த யோசனை இந்திய துருப்புக்களின் மன உறுதியைக் குறைத்து,  பனி குளிர்காலத்தில் வீரர்கள் எப்போதும் சூடான நீராவி உணவு, தளவாடங்கள் ஆகியவற்றைப் பெறுவதில்லை என்ற அதிருப்தியை உருவாக்குவது அவர்களது நோக்கமாகும்.
 
முன்னாள் இந்திய ராணுவத் தளபதியின் கூற்றுப்படி, சீன ராணுவம் 1962 ஆம் ஆண்டு மேற்கு மற்றும் கிழக்குத் துறைகளிலும், 1967 நாது லா மோதலின் போதும் இதே ஒலிபெருக்கி தந்திரங்களை பயன்படுத்தியது. ஒரு வேளை பஞ்சாப் துருப்புக்கள் ஃபிங்கர் 4 பகுதி உயரங்களை பிடித்துக் கொண்டிருப்பதாக சீன ராணுவம் நினைத்திருக்கலாம் என கூறினார்.

Next Story