பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்.30-ம் தேதி தீர்ப்பு - லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்.30-ம் தேதி தீர்ப்பு - லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Sept 2020 4:24 PM IST (Updated: 16 Sept 2020 4:24 PM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 30-ம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.

புதுடெல்லி,

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான அனைத்து விசாரணைகளும் செப்டம்பர் 1-ம் தேதி முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பு எழுதத் தொடங்கியுள்ளனர். இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் 351 சாட்சிகளும், 600க்கும் மேற்பட்ட ஆவண ஆதாரங்களைளும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கின் தீர்ப்பானது வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கவுள்ளது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story