லடாக் எல்லைப்பகுதியில் 3 துப்பாக்கி சூடு; பாங்கோங் ஏரியின் வடக்கு கரையில் 100 க்கும் மேற்பட்ட சுற்றுகள் துப்பாக்கி சூடு


லடாக் எல்லைப்பகுதியில் 3 துப்பாக்கி சூடு; பாங்கோங் ஏரியின் வடக்கு கரையில் 100 க்கும் மேற்பட்ட சுற்றுகள் துப்பாக்கி சூடு
x
தினத்தந்தி 16 Sept 2020 5:05 PM IST (Updated: 16 Sept 2020 5:05 PM IST)
t-max-icont-min-icon

லடாக் எல்லைப்பகுதியில் 3 துப்பாக்கி சூடு பாங்கோங் ஏரியின் வடக்கு கரையில் 100 க்கும் மேற்பட்ட சுற்றுகள் சுடப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி: 

கிழக்கு லடாக்கில் கடந்த மூன்று வாரங்களாக இந்திய மற்றும் சீன எல்லைப் படையினர் இடையே மூன்று துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து இருப்பது தெரிய வந்துள்ளது.

சீன-இந்தியா டி-ஃபேக்டோ எல்லையில் 45 ஆண்டுகளாக ஒரு துப்பாக்கிச் சம்பவம் கூட நடைபெறவில்லை என்பது ஆனால் அசல் எல்லை கோட்டுப்பகுதியில் தொடர்ந்து நிலவும் தீவிரமான நிலைமையைக் குறிக்கிறது.

ஆகஸ்ட் 29 முதல் 31 வரை பாங்காங் த்சோவின் தெற்கு கரையில் முதல் சம்பவம் ​​இந்திய இராணுவத் துருப்புக்கள் அங்குள்ள நிலையை மாற்ற முயன்ற சீனா முயற்சியை முறியடித்தன. ​​எச்சரிக்கைக்கக சுட்ட நிகழ்ந்ததாக இராணுவ வட்டாரங்கள் மேற்கோளிட்டுள்ளன. செப்டம்பர் 7 அன்று முக்பாரியில் சுசுல் துறையில் மீண்டும் துப்பாக்கி சூடு நடைபெற்றது.

"ஆகஸ்ட் 29-31 க்கு இடையில் பாங்கோங் ஏரியின் தெற்கு கரைக்கு அருகில் உயரங்களை ஆக்கிரமிப்பதற்கான சீன முயற்சியை இந்திய இராணுவம்  நிறுத்தியபோது முதல் சம்பவம் நடந்தது, இரண்டாவது சம்பவம் செப்டம்பர் 7 ஆம் தேதி முக்பாரி உயரத்திற்கு அருகில் நிகழ்ந்தது" என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

செப்டம்பர் 8 ஆம் தேதி இந்த நடவடிக்கை பாங்காங் த்சோவின் வடக்கு கரையில் மாற்றப்பட்டது, இரு தரப்பு படையினரும் 100 க்கும் மேற்பட்ட சுற்றுகளை சுட்டதாக கூறப்படுகிறது. சீன இராணுவத்தின் துருப்புக்கள் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டபோது துப்பாக்கிச் சூடு நடந்தது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.



Next Story