புதிய பாராளுமன்றம் கட்டும் பணி: டாடா நிறுவனம் ரூ. 861.90 கோடிக்கு ஏலம்


புதிய பாராளுமன்றம் கட்டும் பணி:  டாடா நிறுவனம் ரூ. 861.90 கோடிக்கு ஏலம்
x
தினத்தந்தி 16 Sep 2020 12:31 PM GMT (Updated: 16 Sep 2020 12:31 PM GMT)

புதிய பாராளுமன்றம் கட்டும் பணியை டாடா நிறுவனம் ரூ. 861.90 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது.

புதுடெல்லி: 

இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் ஏலத்தை டாட்டா நிறுவனம் வென்று உள்ளது.  ரூ. 865 கோடி ஏலத்தை சமர்ப்பித்த லார்சன் மற்றும் டூப்ரோவை ரூ. 861.90 கோடி ஏலம் கேட்டு டாடா வென்று உள்ளது.
 
புதிய பொது நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான நிதி முயற்சிகளை மத்திய பொதுப்பணித் துறை இன்று திறந்து வைத்தது. இந்த திட்டம் ஒரு வருடத்தில் நிறைவடையும்.

அரசாங்க குடிமை அமைப்பு ரூ.940 கோடி செலவாகும் என்று மதிப்பிட்டிருந்தது.

புதிய கட்டிடம் ஒரு முக்கோணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் வட்டமானது. இந்த கட்டிடம் பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்ட பின்னர் மற்ற தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.



Next Story