“2ஜி சேவையை கைவிடும் திட்டம் இல்லை” - தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் கோத்ரே விளக்கம்


“2ஜி சேவையை கைவிடும் திட்டம் இல்லை” - தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் கோத்ரே விளக்கம்
x

2ஜி சேவையை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் எதுவுமில்லை என தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் கோத்ரே மக்களவையில் விளக்கமளித்தார்.

புதுடெல்லி,

இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தற்போது 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், “2ஜி சேவையை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் இருக்கிறதா?” என திமுக எம்.பி செந்தில்குமார் உள்ளிட்டோர் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் கோத்ரே, “2ஜி சேவையை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் எதுவுமில்லை” என்று திட்டவட்டமாக பதிலளித்தார். மேலும் எழுத்துப்பூர்வமாக மத்திய இணையமைச்சர் சஞ்சய் கோத்ரே அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது;-

“2ஜி சேவையை கைவிடும்படி தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்தும் எந்த பரிந்துரைகளும் மத்திய அரசுக்கு வரவில்லை. மேலும் எந்த விதமான தொலைதொடர்பு வசதிகளை வழங்குவது என்பது குறித்து முடிவு செய்வது தொலைதொடர்பு நிறுவனங்கள் தான். அதற்கான அலைக்கற்றைகளை வெவ்வேறு தரவரிசைகளில் தொலைபேசி நிறுவங்களுக்கு ஏலத்தின் மூலம் வழங்குவது தான் மத்திய அரசின் பணி” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தற்போது 2ஜி சேவை நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

Next Story