இந்திய கலாசாரம் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர் குழுவில் தென்இந்தியர்களை நியமிக்காதது துரதிர்ஷ்டம் - குமாரசாமி கருத்து


இந்திய கலாசாரம் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர் குழுவில் தென்இந்தியர்களை நியமிக்காதது துரதிர்ஷ்டம் - குமாரசாமி கருத்து
x
தினத்தந்தி 17 Sep 2020 4:53 AM GMT (Updated: 17 Sep 2020 4:53 AM GMT)

இந்திய கலாசாரம் குறித்து ஆய்வு செய்யும் நிபுணர் குழுவில் தென்இந்தியர்களை நியமிக்காதது துரதிர்ஷ்டம் என்று குமாரசாமி கருத்து கூறியுள்ளார்.

பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டரில் பதிவில் கூறியிருப்பதாவது:-

12 ஆயிரம் ஆண்டுகளாக உள்ள இந்திய கலாசாரம் குறித்து ஆய்வு செய்ய 16 பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. அந்த குழுவில் கன்னடரையோ அல்லது தென்இந்தியாவின் திராவிட பரம்பரையை சேர்ந்த ஒருவரையோ நியமிக்காதது துரதிர்ஷ்டம். அந்த குழுவில் ஒரு பெண் கூட நியமிக்கப்படவில்லை. நிபுணர் குழுவில் கன்னடர் ஒருவர் இல்லாத நிலையில் கர்நாடகத்தின் கலாசாரம், பண்பாடு குறித்து நியாயமான ஆய்வு நடைபெறுவது சாத்தியமா?.

தென்இந்தியர்களை தொலைவில் வைத்துவிட்டு, ஒட்டுமொத்த தேசத்தின் கலாசாரம் எப்படி ஆய்வு செய்யப்படும்?. நாங்கள் இந்த நாட்டை தாயுடனும், பசுவுடனும் ஒப்பிடுகிறோம். பெண்களை வழிபடும் இந்த நாட்டின் கலாசாரத்தை ஆய்வு செய்யும் குழுவில் பெண் ஒருவர் இடம் பெறாமல் எப்படி ஆய்வு செய்ய முடியும்?.

கலாசாரம், இதிகாசம், பண்பாடு ஆகிய விஷயத்தில் முழுவதும் வடஇந்தியர்களை கொண்டுள்ள அந்த குழுஒருதலைபட்சமாக செயல்படும் என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. எனவே, அந்த குழுவை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story