நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்


நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 17 Sept 2020 1:34 PM IST (Updated: 17 Sept 2020 1:34 PM IST)
t-max-icont-min-icon

நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம் என்று மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

மாநிலங்களவையில் லடாக் பிரச்சினை தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை தாக்கல் செய்து பேசினார். அப்போது பேசிய அவர், “நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விடமாட்டோம்” என்று தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “எல்லையில் அத்துமீறல் முயற்சிகளை சீனா கைவிடாவிட்டால் இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்காது. ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனா செயல்பட்டால் எல்லையில் அமைதியை நிலைநாட்ட முடியும். எல்லை வரையறை செய்வது குறித்து இரு நாடுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், என்னால் விவரிக்க முடியாத முக்கியமான செயல்பாட்டு சிக்கல்கள் உள்ளன. இந்த விஷயத்தின் தன்மையை சபை புரிந்து கொள்ளும் என்று நான் நம்புகிறேன்

இந்தியா எல்லைப் பகுதியில் பல இடங்களை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. சீனா லடாக் பகுதியில் 38 ஆயிரம் சதுர அடி நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. இந்தியாவும் சீனாவும் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றே விரும்புகிறோம். அதே நேரத்தில், அனைத்து எதிரான செயல்களையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

Next Story