ஏழைகளுக்கு சேவை செய்வதே மோடிஜி பிறந்த நாள் கொண்டாட்டத்தின் சிறந்த வழி; ஜே.பி. நட்டா பேச்சு


ஏழைகளுக்கு சேவை செய்வதே மோடிஜி பிறந்த நாள் கொண்டாட்டத்தின் சிறந்த வழி; ஜே.பி. நட்டா பேச்சு
x
தினத்தந்தி 17 Sept 2020 7:57 PM IST (Updated: 17 Sept 2020 7:57 PM IST)
t-max-icont-min-icon

ஏழைகளுக்கு சேவை செய்வதே பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான சிறந்த வழியாகும் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நாடுகளின் உலக தலைவர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  இதனை முன்னிட்டு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்பொழுது, ஒவ்வொரு வீட்டிற்கும் மின் வினியோகம் செய்யப்படும் என்பதனை உறுதி செய்ய வேண்டும் என மோடிஜி முடிவொன்றை எடுத்தார்.

இதன்பின்னர் 3 ஆண்டுகளில், 2.5 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது என கூறினார்.  தொடர்ந்து பேசிய நட்டா, மோடிஜியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கான சிறந்த வழி ஏழைகள், அடிப்படை வசதிகளை இழந்த மற்றும் சுரண்டப்பட்டவர்களுக்கு சேவை செய்வதே ஆகும்.

நாடு முழுவதும் பல சேவை பணிகள் நடந்து வருகின்றன.  அரசியல் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது என்பது அரசியல் கட்சிகளின் பணி.  எனினும், நாட்டின் கலாசாரம் மட்டுமின்றி கட்சியின் கலாசாரத்தினையும் மோடிஜி மாற்றியுள்ளார்.

நாம் இன்று அரசியல் மட்டும் செய்து கொண்டிருக்கவில்லை.  சேவை பணிகளையும் செய்து கொண்டிருக்கிறோம் என்று நட்டா பேசியுள்ளார்.

Next Story