டெல்லி மருத்துவமனையில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டிஸ்சார்ஜ்
டெல்லி மருத்துவமனையில் இருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
புதுடெல்லி,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த ஆகஸ்ட் 2ந்தேதி கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன்பின் ஆகஸ்ட் 14ந்தேதி குணம் அடைந்தார். பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனினும், உடல் சோர்வு மற்றும் உடல் வலி இருந்ததால், கொரோனா பாதிப்புக்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த மாதம் 18ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, ஆகஸ்ட் இறுதியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த 12ந்தேதி அமித்ஷா மீண்டும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த முறை முழு மருத்துவ பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.
Related Tags :
Next Story