பிரதமர் மோடி எழுதிய ‘தாய்க்கு கடிதங்கள்’ புத்தகம்


பிரதமர் மோடி எழுதிய ‘தாய்க்கு கடிதங்கள்’ புத்தகம்
x
தினத்தந்தி 18 Sept 2020 5:42 AM IST (Updated: 18 Sept 2020 5:42 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு நேற்று 69 வயது முடிந்து 70-வது வயது பிறந்தது.

கொல்கத்தா,

பிரதமர் மோடிக்கு நேற்று 69 வயது முடிந்து 70-வது வயது பிறந்தது. அவரது பிறந்த நாளை பாரதீய ஜனதா கட்சியினர் சேவை தினமாக நேற்று நாடு முழுவதும் கொண்டாடினார்கள். மோடியின் பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அக்கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர். பல இடங்களில் மோடியின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில் பிரதமர் மோடி இளம் வயதில் இருந்தே தனது எண்ணங்களை கடிதமாக எழுதும் பழக்கம் கொண்டவர். ஒவ்வொரு நாளும் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஒவ்வொரு தலைப்பில் தனது எண்ணங்களை கடிதமாக அன்னை தெய்வத்துக்கு என்ற பெயரில் குஜராத்தி மொழியில் கடிதமாக எழுதி வந்தார். அவ்வாறு அவர் எழுதி வந்த கடிதங்களை பாவனா சோமாயா என்ற எழுத்தாளர் ஆங்கிலத்தில் ‘தாய்க்கு கடிதங்கள்’ என்ற பெயரில் மொழி பெயர்த்து உள்ளார். அந்த புத்தகம் வெளியாகி உள்ளது.

அந்த புத்தகத்தில் தன்னை பற்றியும் மோடி எழுதி இருக்கிறார். அதில், தான் தொழில்முறை எழுத்தாளர் அல்ல என்றபோதிலும் தன்னால் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என்றும், அதன்படி தனது மனதில் உள்ள எண்ணங்களை கடிதங்களாக எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story