இந்தியாவில் இதுவரை 6.15 கோடி மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்


இந்தியாவில் இதுவரை 6.15 கோடி மாதிரிகள் பரிசோதனை: ஐசிஎம்ஆர் தகவல்
x
தினத்தந்தி 18 Sept 2020 9:06 AM IST (Updated: 18 Sept 2020 9:06 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் இதுவரை 6.15 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்துகள் செயல்பாட்டுக்கு வரவில்லை. மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டங்களில் தடுப்பு மருந்துகள் உள்ளன. இந்த தடுப்பு மருந்துகள் பொது பயன்பாட்டுக்கு கிடைக்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.  

இதனால், தற்போதைக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்த  பரிசோதனை, தொடர்புகளை கண்டறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவையே முக்கிய காரணிகளில் ஒன்றாக உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது.  இதனால், கொரோனா மாதிரிகள் பரிசோதனையை உலக நாடுகள் அதிக அளவில் மேற்கொண்டு தொற்று பாதித்தவர்களை கண்டறிந்து வருகின்றன.  இந்தியாவிலும் தினசரி சராசரியாக 10 லட்சம் கொரோனா  பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் நேற்று ஒருநாளில் மட்டும் கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய 10,06,615-  மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.  செப்டம்பர் 17 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 6 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரத்து 343 ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story