வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: பஞ்சாப்பில் விவசாயிகள் 3 நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு


வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு: பஞ்சாப்பில் விவசாயிகள் 3 நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Sept 2020 10:54 AM IST (Updated: 18 Sept 2020 10:54 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் விவசாயிகள் 3 நாட்கள் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ்,
 
நாடாளுமன்றத்தில் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களை தாக்கல் செய்தார். விவசாயிகள் விளைபொருள் வர்த்தக மேம்பாடு மற்றும் வசதிக்கான மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் அதிகாரமளித்தல் மசோதா, விவசாய சேவை மசோதா ஆகியவை அந்த மூன்று மசோதாக்கள் தாக்கல்  செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகின்றன. 

இந்த நிலையில், 3 வேளான் திருத்த மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப்பில் மூன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.  செப்டமர் 24 ,25,26 ஆகிய தேதிகளில் போராட்டம் நடைபெறும் என்று விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது. 

Next Story