இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க தடை
இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானங்கள் பறக்க துபாய் போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
துபாய்,
இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் 15 நாட்கள் பறக்க துபாய் அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் இருந்து துபாய் சென்ற விமானங்களில் பயணித்த பயணிகளில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் பறக்க தடை விதித்து துபாய் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், மீண்டும் கொரோனா பாதித்த பயணிகளை விமானத்தில் ஏற்றி வருவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய முழு விவரத்தையும் தாக்கல் செய்யுமாறும் துபாய் அரசு ஏர் இந்தியாவிடம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Related Tags :
Next Story