வரலாற்று சிறப்பு மிக்க கோசி ரெயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி


வரலாற்று சிறப்பு மிக்க கோசி ரெயில் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 18 Sep 2020 7:34 AM GMT (Updated: 18 Sep 2020 7:34 AM GMT)

வரலாற்று சிறப்பு மிக்க கோசி ரெயில் பாலத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

பாட்னா,

பீகாரில் கோசி ஆற்றின்  குறுக்கே பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு 2003 - 2004 ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 516 கோடி ரூபாய் மதிப்பில் 1.9 கி.மீ. நீளத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் முடிவடைந்துள்ளன. 

இதையடுத்து, இந்த ரயில் பாலத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த திட்டத்துடன் மேலும் மின் மயமாக்கப்பட்ட 12 ரயில் வழித்தடங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.  வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் இந்த பாலம் திறக்கப்படுவது பீகார் வரலாற்றில் சிறப்புமிக்க தருணமாகும். இதன்மூலம் 86 -ஆண்டு கனவு நிறைவேற உள்ளது. பிராந்திய மக்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்க உள்ளது. 


Next Story