சோபியான் என்கவுண்ட்டர்: ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை
சோபியான் என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.
ஸ்ரீநகர்,
தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையின் போது அம்சாபுரா என்ற கிராமத்தில் 3 பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. ஆனால் ராணுவம் பயங்கரவாதிகளை சுட்டுக்கொல்லவில்லை என்றும், ஜம்மு ரஜோரி மாவட்டத்தை சேர்ந்த அப்பாவிகள் 3 பேரை சுட்டுத்தள்ளியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இதையடுத்து, இந்த என்கவுண்ட்டர் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டது. விசாரணை 4 வார காலம் நடந்தது. இதுதொடர்பான விசாரணை அறிக்கையில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்ட 1990-ன் விதிகளை ராணுவ வீரர்கள் மீறியுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ராணுவத்தினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story