நிருபர்கள், நாடாளுமன்ற ஊழியர்களுக்கு தினசரி கட்டாய பரிசோதனை-புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

நிருபர்கள், நாடாளுமன்ற ஊழியர்களுக்கு தினசரி கட்டாய பரிசோதனை-புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
x
தினத்தந்தி 19 Sept 2020 9:17 AM IST (Updated: 19 Sept 2020 9:17 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எம்.பி.க்கள் பலருக்கு கொரோனா இருந்ததை அடுத்து நாடாளுமன்ற வளாகத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எம்.பி.க்கள் பலருக்கு கொரோனா இருந்ததை அடுத்து நாடாளுமன்ற வளாகத்திற்கு புதிய வழிகாட்டு நெறிமுறையை பின்பற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நாடாளுமன்றத்தின் இரு அவை எம்.பி.க்கள் அனைவரும் குறிப்பிட்ட இடைவெளியில் ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை செய்து கொள்ள வேண்டும். இரு அவைகளுக்கும் செய்தி சேகரிக்க வரும் நிருபர்களும் 72 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த சோதனை செய்து கொள்ள வேண்டும். அதிலும் நெகட்டிவ் முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்படுவார்கள்.

ஆர்.டி.-பி.சி.ஆர். சோதனை முடிவுகள் வர காலதாமதம் ஆகும் என்பதால், நாடாளுமன்றத்திற்கு வரும் நிருபர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு திறனை உறுதி செய்யும் ஆன்டிஜென் பரிசோதனை தினமும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்று நாடாளுமன்ற அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story