ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு - ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி


ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு - ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி
x
தினத்தந்தி 19 Sept 2020 9:24 AM IST (Updated: 19 Sept 2020 9:24 AM IST)
t-max-icont-min-icon

ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ள ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்க உள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

முதலில் நாட்டின் நிலைப்பாடு தொடர்பாக பிரதமர் உரையாற்ற உள்ளதாகவும் இரண்டாவது அமர்வு ஐ.நா. பொது சபை உருவாக்கப்பட்ட 75-வது ஆண்டு சிறப்பு அமர்வில் பிரதமர் உரையாற்றுவது என இரண்டு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக திருமூர்த்தி தெரிவித்துள்ளார். 

இதில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து பிரதமர் முக்கிய தகவல்களை வெளியிடுவார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த பொது சபைக் கூட்டத்தின் இடையே நடைபெற உள்ள அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டங்களில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளதாகவும், ஒரு நல்ல தருணத்தில் இந்தியா ஐ.நா. பாதுகாப்பு குழுவில் பங்கேற்க உள்ளதாக திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா மற்றும் 75-வது ஆண்டில் ஐ.நா. பொது சபை அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில், வித்தியாசமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள நமக்கு கிடைத்த வாய்ப்பு தற்போது கிடைத்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு நாம் இந்த குழுவில் இருந்த போது உள்ள நிலை தற்போது உலகில் இல்லை என்றும், உலகம் மாறியுள்ளதாகவும் திருமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அமைதி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட நமது முன்னுரிமைகளை முன்னெடுப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார். 


Next Story