வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்க காங்கிரஸ் மாநிலங்களவையில் வலியுறுத்தியது.
புதுடெல்லி,
நாட்டில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து வகை வெங்காய ஏற்றுமதிக்கும் கடந்த திங்கட்கிழமை மத்திய அரசு தடை விதித்தது. இதன் காரணமாக அதிக அளவில் வெங்காயம் விளைவிக்கும் மராட்டிய விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மத்திய அரசின் முடிவுக்கு மராட்டியத்தை சேர்ந்த கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் எழுப்பி காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சாதவ், வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது விவசாயிகளைப் பெருமளவில் பாதிக்கும்.
கொரோனா நோய்த்தொற்று பரவலால் நாட்டின் பொருளாதாரம் ஏற்கெனவே சரிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் ஏற்கெனவே பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றனா். மாநில விவசாயிகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக வெங்காய ஏற்றுமதி உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டும்" என்றார்.
Related Tags :
Next Story