ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் துபாய் சேவைக்கு விதிக்கப்பட்ட 15 நாள் தடை நீக்கம்


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் துபாய் சேவைக்கு விதிக்கப்பட்ட 15 நாள் தடை நீக்கம்
x
தினத்தந்தி 19 Sep 2020 6:03 AM GMT (Updated: 19 Sep 2020 6:03 AM GMT)

துபாயில் இருந்து விமான சேவை வழக்கம் போல் இயங்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து துபாய்க்கு வரும் பயணிகளுக்கு கொரோனா  பரிசோதனை மேற்கொண்ட பின்னர்தான் அழைத்து வர வேண்டும் என்று துபாய் சிவில் ஏவியேஷன் ஆணையம் தெரிவித்து இருந்தது. கடந்த 15 ஆம் தேதியில் இருந்து துபாய்க்கு விமான சேவை துவங்கியுள்ளது. 

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மூலம் பயணிகள் சென்றனர். இதில் இரண்டு விமானங்களில் சென்ற இரண்டு பயணிகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து,  இந்தியாவில் ஏர்இந்தியா அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டதாக  கூறி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களை இயக்குதவற்கு 15 நாட்கள் தடை விதித்து அந்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில்,  மேற்கண்ட உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது.  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இன்று (சனிக்கிழமை) முதல் மீண்டும் விமானங்கள் வழக்கம்போல் துபாய், இந்தியா இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story