திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது


திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது
x
தினத்தந்தி 19 Sept 2020 6:24 PM IST (Updated: 19 Sept 2020 6:24 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது ஆகும். ஆண்டு தோறும் பிரம்மோற்சவ நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவார்கள். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சில ஆயிரம் பேர் மட்டுமே திருமலைக்கு வந்துள்ளனர்.

கோவில் மாடவீதிகளில் பிரம்மாண்டமான அளவில் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு கோயில் வளாகத்திற்கு உள்ளேயே திருப்பதி வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

இதனையடுத்து தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 5 டன் மலர்களால் கோயில் வளாகம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவானது, 27ஆம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது.

Next Story