திருப்பதி பிரம்மோற்சவ விழா: முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி


திருப்பதி பிரம்மோற்சவ விழா: முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி
x
தினத்தந்தி 20 Sept 2020 12:02 AM IST (Updated: 20 Sept 2020 12:02 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி பிரம்மோற்சவ விழா முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளினார்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது ஆகும். ஆண்டு தோறும் பிரம்மோற்சவ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தருவார்கள்.

பிரம்மனே வந்து பெருமாளுக்காக நடத்தும் விழா என்பதால் பிரம்மோற்சவ விழா என்றழைக்கப்படுகிறது. விழா நடைபெறும் ஒன்பது நாட்களிலும் திருமலை பூலோக சொர்க்கம் போல அலங்கரிக்கப்பட்டு இருக்கும். மாட வீதிகளில் சுவாமி உலா வரும் போது பக்தர்கள் பல ஆயிரக்கணக்கில் திரண்டு இருப்பர். பல்வேறு மாநில கலைஞர்களின் ஆட்டம் பாட்டம் என்று திருமலையே களைகட்டும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் முறையாக பிரம்மோற்சவ விழா இந்த வருடம் கோவிலுக்குள்ளேயே நடத்த முடிவு செய்யப்பட்டு அதன்படி விழா நடந்துவருகிறது. இன்று மாலை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

கருடன் படம் வரையப்பட்ட மஞ்சள் கொடி கோவிலுனுள் உள்ள தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. அந்த நேரம் அர்ச்கர்கள் கோவில் சேர்மன் நிர்வாக அதிகாரி என்று மொத்தமே ஐம்பது பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

 முதல் நாளில் பெரிய சேஷ வாகனத்தில் இரவு எட்டு மணியளவில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியருடன் எழுந்தருளினார். கல்யாண மண்டபத்தில் எழுந்தருளும் நேரமும் குறைக்கப்பட்டது. திருமலையில் பெருமாளை பார்க்க பிரம்மோற்சவ நாளில் எண்பது ஆயிரம் பேர்களில் இருந்து ஒரு லட்சம் பேர் வரை வருவர் ஆனால் இப்போது பதிமூன்றாயிரம் பேர்களுக்கு மட்டுமே முன்னுாறு ரூபாய் டிக்கெட் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. இலவச தரிசனம் கிடையாது.  ஆன்லைனில் டிக்கெட் எடுத்து வருபவர்கள் நெரிசல் இல்லாமல் பெருமாளை தரிசித்து வருகின்றனர். இந்த விவரம் எதுவும் தெரியாமல் மலைக்கு வரும் பக்தர்கள் அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

Next Story