வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் தாய் காலமானார்


வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் தாய் காலமானார்
x
தினத்தந்தி 20 Sept 2020 7:39 AM IST (Updated: 20 Sept 2020 7:39 AM IST)
t-max-icont-min-icon

வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் தாய் சுலோசனா சுப்ரமணியம் காலமானார்.

புதுடெல்லி, 

மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் தாய் சுலோசனா சுப்ரமணியம். 90 வயதை நெருங்கிய அவர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தார். அவர் நேற்று காலமானார்.

இதை ஜெய்சங்கர் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார். தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் அவர் அதில் வெளியிட்டு இருந்தார். தனது தாயின் நோய் காலத்தில் உதவி செய்த அனைவருக்கும் நன்றியும் கூறியிருந்தார்.

சுலோசனா மறைவுக்கு மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு, பா.ஜனதா தலைவர் ராம் மாதவ், நிதி ஆயோக் தலைவர் அமிதாப் கந்த் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

சுலோசனா தனது மகன்கள் ஜெய்சங்கர், விஜய்குமார், சஞ்சய் சுப்ரமணியம் ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது கணவர் திருச்சியை சேர்ந்த சுப்ரமணியம் ஆவார். இந்திய அணுசக்தி கோட்பாட்டின் தந்தை என அழைக்கப்படும் இவர், கடந்த 2011-ம் ஆண்டு காலமானார்.




Next Story