இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 12 லட்சம் கொரோனா பரிசோதனை


இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு  ஒரே நாளில் 12 லட்சம் கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 20 Sept 2020 1:57 PM IST (Updated: 20 Sept 2020 1:57 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 92,605-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடுகளின் வரிசையில் இந்தியா 2-ஆம் இடம் வகிக்கிறது. கொரோனா தொற்றைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை எண்ணிக்கையிலும் இந்தியா, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. இந்தியாவில் தினமும் கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், கடந்த  சில நாட்களாக பத்து லட்சத்திற்கு கீழ் கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், நேற்று ஒருநாளில் மட்டும் 12 லட்சத்து 06 ஆயிரத்து 806-சளி மாதிரிகள் கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய பரிசோதிக்கப்பட்டதாக இ இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 6 கோடியே 36 லட்சத்து 61 ஆயிரத்து 060 மாதிரிகள் பரிசோதிக்கக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுவது இதுதான் முதல் தடவையாகும்.  ஏப்ரல் 8 ஆம் தேதியன்று ஒரு நாளைக்கு வெறும் பத்தாயிரம் பரிசோதனைகளை மட்டுமே நாடு மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது இது 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கடந்த ஒன்பது நாட்களில் மட்டுமே ஒரு கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.


Next Story