குளோனிங் முறையில் அதிக பால் கொடுக்கும் எருமை கன்று உருவாக்கி சாதனை


குளோனிங் முறையில் அதிக பால் கொடுக்கும் எருமை கன்று உருவாக்கி சாதனை
x
தினத்தந்தி 20 Sep 2020 11:57 AM GMT (Updated: 20 Sep 2020 11:57 AM GMT)

அரியானாவில் தேசிய பால் பண்ணை ஆய்வு மையம் குளோனிங் முறையில் அதிக பால் கொடுக்கும் எருமை கன்றை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர்.

கர்னல்,

அரியானாவின் கர்னல் நகரில் தேசிய பால் பண்ணை ஆய்வு மையம் அமைந்துள்ளது.  இது குளோனிங் முறையில் செயற்கையாக விலங்குகளை உருவாக்கும் பணியில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதன்படி, குளோனிங் தொழில்நுட்ப உதவியுடன் இந்த மையம் எருமை கன்று ஒன்றை உருவாக்கி உள்ளது.  அதற்கு தேஜஸ் என பெயரிடப்பட்டு உள்ளது.  நாட்டில் எருமை பால் உற்பத்தி அதிகரிப்பதற்கு உதவியாக இந்த உருவாக்கம் இருக்கும்.  இதனால், விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என அந்த மையத்தின் இயக்குனர் மன்மோகன் சிங் சவுகான் கூறியுள்ளார்.

இந்த தேஜஸ் என்ற புதிய குளோன் எருமையானது, அதிக பால் கொடுக்கும் முர்ரா வகை எருமை இனத்தில் இருந்து உருவாக்கப்பட்டது.  கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் 16 குளோன் எருமைகள் உருவாக்கப்பட்டு உள்ளன என அவர் கூறியுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டில் முதல் பெண் எருமை குளோனிங்கில் உருவாக்கப்பட்டது.  அதற்கு கரீமா என பெயரிடப்பட்டது.  அதன்பின்னர் கரீமாவுக்கு முறையே 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் மகிமா மற்றும் கரீஷ்மா ஆகிய இரு எருமை கன்றுகள் இயற்கை முறையில் பிறந்தன.

Next Story