வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு


வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி நாடு தழுவிய போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Sep 2020 6:16 PM GMT (Updated: 2020-09-21T23:46:36+05:30)

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 24ம் தேதி நாடு தழுவிய போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ந் தேதி தொடங்கியது.

விவசாய விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகிய3 வேளாண் மசோதாக் களை மத்திய அரசுமக்களவையில் தாக்கல் செய்தது.

இந்த மசோதாக்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிரானவை என்று கூறி காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே இந்த 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மக்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு எதிர் கட்சிகள் தொடர்ந்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், ஏ.கே.அந்தோணி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரியங்காகாந்தி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார். கூட்டத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு பின், செப்டம்பர் 24ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாக அந்தோணி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் செய்தியாளர்கள் சந்திப்பு தொடர்ந்து நடைபெறும். கட்சி தலைவர்கள், தங்கள் மாநில கவர்னர்களிடம் இதுகுறித்து குறிப்பாணையை சமர்ப்பிப்பார்கள் என்றார்.

Next Story