லடாக்கில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் 6-வது கட்ட பேச்சுவார்த்தை முதல் முறையாக வெளியுறவு அதிகாரியும் பங்கேற்பு
லடாக் எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நேற்று 6-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
லடாக் எல்லையில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நேற்று 6-வது கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் முதல் முறையாக வெளியுறவு அதிகாரி ஒருவரும் பங்கேற்றார்.
லடாக்கின் கிழக்கு எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சிகளால் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பதற்றம் நிலவி வருகிறது. அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15-ந்தேதி இருநாட்டு ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனாவின் 35 வீரர்களும் உயிரிழந்தனர்.
அதன் பின்னரும் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகள் தொடர்ந்தன. குறிப்பாக கடந்த மாதம் 29-ந்தேதி இரவில் மீண்டும் சீன ராணுவம் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்தனர். எனினும் கடந்த 3 வாரங்களில் 3 முறை இந்திய தரப்பை சீண்டும் வகையில் சீன ராணுவம் நடந்து கொண்டது. இதில் 45 ஆண்டுகளுக்குப்பின் முதல் முறையாக துப்பாக்கிச்சூடும் நடந்தது.
சீன ராணுவத்தின் இத்தகைய தொடர் அத்துமீறல்களால் எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு எத்தகைய அச்சுறுத்தலையும் சமாளிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இந்தியா படைகளை குவித்து தயார் நிலையில் இருக்கிறது. அத்துடன் எல்லையின் முக்கிய மோதல் களமாக மாறியிருக்கும் பங்கோங் ஏரியின் தெற்கு கரையில் உள்ள மலை முகடுகளை ஆக்கிரமித்து கண்காணிப்பையும் பலப்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு இரு நாடுகளுக்கு இடையேயான மோதல் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் அங்கு இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெற்று அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக இரு நாடுகளின் ராணுவ கமாண்டர்கள் அடிக்கடி சந்தித்து இந்த அமைதி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகின்றனர்.
மேலும் இரு நாடுகளின் ராணுவ மந்திரிகள் இந்த மாத தொடக்கத்தில் மாஸ்கோவில் சந்தித்து பேசினர். இதன் தொடர்ச்சியாக கடந்த 10-ந்தேதி இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், சீன வெளியுறவு மந்திரி வாங் யியை மாஸ்கோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக 5 அம்ச திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. மேலும் அங்கு அமைதியை நிலைநாட்டுவதற்காக இரு நாடுகளும் கூட்டு பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டன.
இந்தநிலையில் இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் நேற்று 6-வது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். லடாக் அசல் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் அமைந்துள்ள சீன பகுதியான மோல்டோவில் இந்த சந்திப்பு நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் ராணுவத்தின் லே பகுதி 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே.மேனன் (இவர் அடுத்த மாதம் முதல் இந்த படைப்பிரிவுக்கு தலைமை தாங்குவார் என தெரிகிறது) மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் வெளியுறவு அமைச்சகத்தின் இணை செயலாளர் (கிழக்கு ஆசியா) நவீன் ஸ்ரீவஸ்தவா முதல் முறையாக இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றார்.
சீனா தரப்பில் தெற்கு ஜின்ஜியாங் ராணுவ பிராந்திய கமாண்டர் மேஜர் ஜெனரல் லியு லின் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்றனர்.
லடாக்கில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இருநாட்டு மந்திரிகள் இடையே எட்டப்பட்ட 5 அம்ச திட்டத்தை அமல்படுத்துவதற்கான கால வரையறையை உருவாக்குவது குறித்து இந்த பேச்சுவார்த்தையில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து விரைவில் படைகளை விலக்கி, அமைதி மற்றும் நிலைத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையே எல்லையில் படைகளின் தயார் நிலையை வெளிப்படுத்துவதற்காக விமானப்படையில் புதிதாக இணைக்கப்பட்ட ரபேல் போர் விமானங்களை லடாக் எல்லையில் கண்காணிப்பு பணிகளுக்கு இந்தியா அமர்த்தி இருக்கிறது. அவை எல்லை முழுவதும் பறந்து கண்காணித்து வருகின்றன.
அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த 10-ந்தேதிதான் இந்த விமானங்கள் முறைப்படி விமானப்படையில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story