வேளாண் மசோதாக்களுக்கு எதிராக மாநிலங்களவையில் அமளி: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் கூட்டத்தொடர் முழுவதும் சபைக்கு வர தடை
மாநிலங்களவையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். எனவே அவர்கள் இந்த கூட்டத்தொடரின் எஞ்சிய நாட்கள் சபைக்கு வர முடியாது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டவிவசாய விளைபொருட்கள் வர்த்தகமசோதா, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய இரு மசோதாக்களும் நேற்று முன்தினம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இவற்றை தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சபையை நடத்திக் கொண்டிருந்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அதை ஏற்க மறுத்தார்.
இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகளின் உறுப்பினர்கள் துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் சபை விதிமுறை புத்தகங்களை கிழித்து எறிந்தார். துணைத் தலைவரின் மைக்கும் சேதப்படுத்தப்பட்டது. இதனால் 15 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பிறகு சபை மீண்டும் கூடிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புக்கு இடையே இரு மசோதாக்களும் குரல் ஓட்டு மூலம் நிறைவேறின. அத்துடன் கூட்டம் முடிவடைந்தது. என்றாலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறாமல் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் நேற்று காலை மீண்டும் கூடியது.
அப்போது பேசிய வெங்கையா நாயுடு, நேற்று முன்தினம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் துரதிருஷ்டமானது என்றும், ஏற்க முடியாதது என்றும் கூறிய அவர், துணைத் தலைவருக்கு மிரட்டல் விடுத்தது தனக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார். இந்த விஷயத்தில் உறுப்பினர்கள் தங்களை தாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் அப்போது அவர் கூறினார்.
அத்துடன் துணைத் தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கொடுக்கப்பட்டு இருந்த நோட்டீசையும் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
சட்ட விதிகளின்படி, நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர 14 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்றும், எனவே இந்த நோட்டீஸ் முறைப்படி இல்லாததால் அதை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் சபை நடவடிக்கைகளை தான் பார்த்து அறிந்ததாகவும், சில உறுப்பினர்களின் நடவடிக்கை நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு எதிராக இருந்ததாகவும் அவர் கூறினார்.
அதன்பிறகு, நேற்று முன்தினம் சபையில் அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன், தோலா சென் (இருவரும் திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய் சிங் (ஆம் ஆத்மி), ராஜீவ் சாதவ், சையத் நசீர் உசேன், ரிபுன் போரன் (மூவரும் காங்கிரஸ்), கே.கே.ராகேஷ், எளமாரம் கரீம் (இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) ஆகிய 8 எம்.பி.க்களையும் இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்ய வேண்டும் என்று கோரி நாடாளுமன்ற விவகார ராஜாங்க மந்திரி வி.முரளதரன் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். 8 பேரும் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொண்டதால் அவர்களை இடைநீக்கம் செய்யவேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
என்றாலும், 8 எம்.பி.க்களையும் இடைநீக்கம் செய்யும் தீர்மானம் உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, 8 பேரும் இந்த கூட்டத்தொடரின் மீதம் உள்ள நாட்கள் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்த வெங்கையா நாயுடு, அவர்களை சபையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால் அவர்கள், தங்களை இடைநீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையை விட்டு வெளியேற மறுத்தனர்.
இதனால் சபை 20 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு சபை கூடிய போதும், 8 எம்.பி.க்களும் வெளியேற மறுத்து சபையிலேயே இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குரல் எழுப்பி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதனால் அடுத்தடுத்து 3 முறை சபையை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன்பிறகு நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடிய போது, சபையை நடத்திய புவனேஸ்வர் கலியா, இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர்கள் வெளியேற மறுத்தனர். 8 உறுப்பினர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யுமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் எழுப்பினார்கள். இதனால், புவனேஸ்வர் கலியா நாள் முழுவதும் சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களும் இனி இந்த கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாது.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, சிவசேனா, மதசார்பற்ற ஜனதாதளம், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்கு வெளியே வந்து, இடைநீக்க நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் கைகளில் வைத்து இருந்தனர்.
தர்ணாவில் ஈடுபட்ட ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில்; எதிர்க்கட்சிகளை பொருட்படுத்தாமல் விவசாயிகளுக்கு எதிரான கருப்பு மசோதாக்களை பாரதீய ஜனதா அரசு நிறைவேற்றி இருப்பதாகவும், எனவே அதை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தார்.

Related Tags :
Next Story