நவம்பர் 1-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் என பரிந்துரை


நவம்பர் 1-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் என பரிந்துரை
x
தினத்தந்தி 22 Sep 2020 7:32 AM GMT (Updated: 2020-09-22T13:02:30+05:30)

நவம்பர் 1-ம் தேதி முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கலாம் என மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரை வெளியிட்டுள்ளது. 

மேலும்,  அக்டோபர் 31-க்குள் மாணவர் சேர்க்கை முடிவடைய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள கல்வி அமைச்சகம், அடுத்த ஆண்டு மார்ச் 8-  26-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.  2020-21- -புதிய கல்வியாண்டு அட்டவணையை  யுஜிசி  பரிந்துரையை ஏற்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

Next Story