திருமலை திருப்பதி பிரம்மோற்சவ 4-வது நாள்: சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி


திருமலை திருப்பதி பிரம்மோற்சவ 4-வது நாள்: சர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
x
தினத்தந்தி 22 Sept 2020 11:37 PM IST (Updated: 22 Sept 2020 11:37 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான இன்று சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி காட்சி அளித்தார்.

திருமலை,

திருமலை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா பிரசித்தி பெற்றது.  27ஆம்தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியின்போது ஏழுமலையானின் சேனாதிபதி யான விஸ்வகேசவர் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பிரம்மோற்சவ ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவார் என்பது ஐதீகம்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இம்முறை வீதி உலா இன்றி, கோவிலுக்குள் மட்டுமே வாகன சேவை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி பிரம்மோற்சவ 4-வது நாளான இன்று காலை  கற்பக விருட்ச வாகனத்தில் அருள்பாலித்த மலையப்ப சுவாமிக்கு தொடர்ந்து பால் ,தேன், தயிர், பன்னீர் ,சந்தனம் ,மஞ்சள் கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது.

இரவு கல்யாண உற்சவ மண்டபத்தில் சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

நாளை காலை (23-ம் தேதி) மோகினி அவதாரத்தில் அருள்பாலிக்க உள்ள மலையப்ப சுவாமிக்கு நாளை இரவு கருட சேவை நடைபெறுகிறது. கருடசேவையையொட்டி  ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.

Next Story