பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 16 வயது சிறுமி வங்கி கணக்கில் ரூ 10 கோடி ...உண்மை என்ன..?


பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 16 வயது சிறுமி வங்கி கணக்கில் ரூ 10 கோடி ...உண்மை என்ன..?
x
தினத்தந்தி 23 Sep 2020 9:05 AM GMT (Updated: 23 Sep 2020 9:05 AM GMT)

16 வயதான உத்தரபிரதேச சிறுமி வங்கி கணக்கில் 'பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ்' ரூ .10 கோடி வரவு வைக்கபட்டதாக தகவல் உண்மை என்ன

புதுடெல்லி

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயதான உத்தரபிரதேச சிறுமி ஒருவர் 'பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ்' வங்கிக் கணக்கில் ரூ .10 கோடி  போடப்பட்டு உள்ளது. இதனால் அதிகாரிகள் குழப்பமடைந்து உள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறுமி  சில நாட்களுக்கு முன்பு தனது வங்கிக் கணக்கில் ரூ .10 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார்.

கல்வியறிவற்ற அந் 2018 முதல்  அந்த பனஸ் டியில் உள்ள அலகாபாத் வங்கியின் கிளையில் ஒரு கணக்கு வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் கடந்த திங்கிழமை வங்கிக்குச் சென்றார், அங்குள்ள அதிகாரிகளால் அவரது கணக்கு இருப்பு ரூ .9.99 கோடி என்று கூறி உள்ளார் 

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோர் உதவியுடன் மாவட்ட பன்ஸ்டி போலீசில் புகார் அளித்தார்.புகாரில்  

கான்பூர் தேஹத் மாவட்டத்தைச் சேர்ந்த நீலேஷ் குமார் என்ற பெயரில் ஒருவர் தன்னிட  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தனிப்பட்ட அடையாள விவரங்களை கேட்டதாக  அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. . 
குமார் சிறுமியான சரோஜிடம் தனது ஆதார் அட்டை, புகைப்படத்தை கேட்டு உள்ளார். மேலும் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் வங்கி கணக்கில் நிதியை மாற்றுவதற்கு இது தேவை என்று கூறி உள்ளார்.

இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பன்ஸ்டி காவல் நிலைய போலீசார் தெரிவித்துள்ள்ளனர்.

இருப்பினும், செய்தி வலைத்தளமான டி.என்.ஏவில் ஒரு "உண்மை சோதனை" அறிக்கையின்படி, சிறுமியின் கணக்கில் ரூ .5,000 மட்டுமே இருந்தது, ஏனெனில் ஒருபோதும் ரூ .10 கோடி பண பரிவர்த்தனை நடை பெற  வாய்ப்பு இல்லை. இருப்பினும், சிறுமியின் கணக்கில் ரூ .17 லட்சம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.


Next Story