அண்டை நாடுகளுடனான உறவை சிதைக்கிறார்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு


அண்டை நாடுகளுடனான உறவை சிதைக்கிறார்: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Sep 2020 9:34 AM GMT (Updated: 2020-09-23T15:04:04+05:30)

அண்டை நாடுகளுடனான உறவை பிரதமர் மோடி அழித்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுடெல்லி,

அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது ஆபத்தானது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். 

 இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:- 'பல ஆண்டுகளாக காங்கிகரஸ் கட்சி வளர்த்து, கட்டமைத்த அண்டை நாடுகளுடனான சமூக நட்புறவை பிரமதர் மோடி அழித்துவிட்டார். அண்டை நாடுகளுடன் நாம் வாழும்போது, நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நண்பர்கள் இல்லாமல் இருப்பது ஆபத்து'  என்று பதிவிட்டுள்ளார். 

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசம், சீனாவுடன் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்துவதாக வெளியான  ஆங்கில செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். 


Next Story