கேரளாவில் இதுவரை இல்லாத உச்சம்; ஒரே நாளில் 5,376-பேருக்கு கொரோனா


கேரளாவில் இதுவரை இல்லாத உச்சம்;  ஒரே நாளில்   5,376-பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Sep 2020 1:21 PM GMT (Updated: 2020-09-23T18:51:10+05:30)

கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம்,

கேரளவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் சீராக உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால், தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை  அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக ஒரே நாளில் 5,376-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை  42,786- ஆக உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 592 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,951 பேர் குணம் அடைந்துள்ளனர்.

Next Story