தேசிய செய்திகள்

டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள் + "||" + 5 Indians who made it to Time's '100 most influential people of 2020' list

டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்

டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள்
டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் 5 இந்தியர்கள் இடம்பெற்று உள்ளனர்.
புதுடெல்லி: 

டைம் பத்திரிகையின் ‘100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020’ பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். 'தலைவர்கள்' பிரிவில் இடம்பெற்ற இந்தியாவைச் சேர்ந்த ஒரே அரசியல்வாதி பிரதமர் மோடி ஆவார்.

மற்ற உலகத் தலைவர்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்; சீன அதிபர் ஜி ஜின்பிங்; 2020 அமெரிக்க தேர்தலில் டிரம்பிற்கு ஜனாதிபதி சவால் விடுக்கும் ஜோ பிடன்; 2020 தேர்தலுக்கான அமெரிக்க ஜனநாயக துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென்; ஜெர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல்; மற்றும் அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி பாசி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

செல்வாக்கு மிக்க மக்கள் பட்டியலில் பிரதமர் மோடியைக் சேர்த்து உள்ள போதும் இந்தியாவின் பிரதமராக மோடி, இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை "சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்", அங்கு "கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் மற்றும் பிற மத பிரிவுகள் அனைத்துமே உள்ளனர்.

எவ்வாறாயினும், இந்து-தேசியவாதி என்று முத்திரை குத்தப்பட்ட பிரதமர் மோடியின் பாரதீய ஜனதா கட்சி, இந்தியாவின் முஸ்லிம்களை குறிவைத்து உயரடுக்கு மட்டுமல்ல, பன்மைத்துவத்தையும் நிராகரித்துள்ளது" என்று பிரதமர் மோடி குறித்து ஆசிரியர் கார்ல் விக் எழுதியுள்ளார். 

கடந்த ஆண்டு மே மாதத்தில் பிரதமர் குறித்து எழுதிய கட்டுரையில் டைம் இருந்தது "இந்தியாவின் வகுப்புவாத தலைமை என குறிப்பிட்டு இருந்தது. இருப்பினும், சில வாரங்களுக்குப் பிறகு, அதே பத்திரிகை ‘ஐக்கிய இந்தியா பல தசாப்தங்களில் மோடி  போல் எந்த பிரதமரையும் பாரத்தது இல்லை’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

100 செல்வாக்குள்ளவர்கள் பட்டியலில் மேலும் 4 இந்தியர்கள் இடம்பெற்று உள்ளனர்.கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, லண்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவர் ரவீந்திர குப்தா( எய்ட்ஸ் நோயைக் கண்டறிந்தவர்,) பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா மற்றும் பில்கிஸ் டெல்லி ஷாஹீன் பாக் இந்திய குடியுரிமை சட்டத்திற்கு போராட்டத்திற்கு காரணமாக இருந்தவர்) ஆகியோர்கள் டைம் பத்திரிகையின் 2020 ஆம் ஆண்டில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் வளர்ச்சியில் பீகார் முன்னணியில் இருக்கிறது - பிரதமர் மோடி
பீகாரில் முந்தைய அரசுகள் ஊழல் வாய்ந்த அரசுகளாக இருந்தன என தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
2. மீனவர்களின் பாதுகாவலராக பிரதமர் மோடி செயல்படுகிறார் - எல்.முருகன்
பிரதமர் மோடி மீனவர்களின் பாதுகாவலராக செயல்படுவதாக பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
3. பிரதமர் நரேந்திர மோடி சொத்து மதிப்பு அதிகரிப்பு ; அமித் ஷாவுக்கு குறைந்தது
கடந்த ஆண்டை விட பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு சற்று அதிகரித்து உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொத்து மதிப்பு குறைந்து உள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
4. தெலுங்கானா, ஆந்திர முதல்வர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
தெலுங்கானாவில் மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் பிரதமர் மோடி - குஷ்பு
பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க கடுமையாக உழைப்போம் என்று அக்கட்சியில் இணைந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.