கழிவறையில் ரகசியமாக கேமிரா வைத்து வீடியோ எடுத்து சம்பளமின்றி வேலை செய்ய ஆசிரியைகளுக்கு மிரட்டல்


கழிவறையில் ரகசியமாக கேமிரா வைத்து வீடியோ எடுத்து சம்பளமின்றி வேலை செய்ய ஆசிரியைகளுக்கு மிரட்டல்
x
தினத்தந்தி 24 Sep 2020 2:11 PM GMT (Updated: 24 Sep 2020 2:11 PM GMT)

பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியை-ஆசிரியர்கள் கழிவறையில் ரகசியமாக கேமிரா வைத்து வீடியோ எடுத்து பல மாதங்களாக சம்பளமின்றி வேலை செய்யுமாறு ஆசிரியை ஆசிரியர்கள் மிரட்டப்பட்டு உள்ளனர்.

மீரட்: 

உத்தரபிரதேசம் மீரட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியை சேர்ந்த 52 ஆசிரியர்கள் கூட்டாக காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதில் பள்ளி நிர்வாகம் அவர்களை பள்ளியின் கழிவறைகளில் மறைமுகமாக எடுக்கப்பட்ட  வீடியோக்களை பயன்படுத்தி அவர்களை பிளாக் மெயில் செய்வதாகவும் பல மாதங்கள் சம்பளம் இல்லாமல் வேலை வாங்குவதாகவும் கூறி உள்ளனர்.

பள்ளியின் நிர்வாகக் குழுவின் செயலாளர்  நிலுவையில் உள்ள சம்பளத்தை கேட்கும்போதெல்லாம் கழிவறையில் எடுத்த  புகைப்படஙகள் மற்றும் வீடியோக்களைக் கொண்டு அச்சுறுத்தி உள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் பள்ளியின் செயலாளர் மற்றும் அவரது மகனுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 504 (வேண்டுமென்றே அவமதிப்பு), 354 (அ) (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 354 (சி) வாயூரிஸம்) பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையில், தனக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை செயலாளர் மறுத்து உள்ளார்பெண்களின் கழிப்பறைக்குள் சி.சி.டி.வி இல்லை. ஆனால் அவை ஆண்கள் கழிப்பறைகளில் நிறுவப்பட்டுள்ளன. சில பள்ளிகளுக்குள் சமீபத்திய கொலை வழக்குகளின் பின்னணியில் இது செய்யப்பட்டது  என கூறி உள்ளார்.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பின்னடைவால்  கடந்த சில மாதங்களாக பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கத் தவறிவிட்டதாக செயலாளர் ஒப்புக்கொண்டார். 

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறும் போது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது, விசாரணையில் காவல்துறைக்கு உதவி செய்ய தடயவியல் துறை அதிகாரிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

2017 ஆம் ஆண்டில்,இதே பள்ளி தனது மாணவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தைப் போல தலைமுடியை வெட்டுமாறு உத்தரவிட்டது. இது மதரஸா அல்ல" என்பதால் மாணவர்கள் தாடியை வைத்திருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Next Story