ஆச்சரியம் ஆனால் உண்மை...குழந்தை மீது ஏறிய சரக்கு ரெயில்.. காயமின்றி உயிர் தப்பிய சம்பவம்


ஆச்சரியம் ஆனால் உண்மை...குழந்தை மீது ஏறிய சரக்கு ரெயில்.. காயமின்றி உயிர் தப்பிய சம்பவம்
x
தினத்தந்தி 24 Sept 2020 8:18 PM IST (Updated: 24 Sept 2020 8:18 PM IST)
t-max-icont-min-icon

அரியானாவில் சரக்கு ரெயில் சிறுவன் மீது ஏறி சிறுகாயமின்றி தப்பிய அச்சரிய சம்பவம் ஒன்று நிழந்து உள்ளது.

பரிதாபாத்

அரியானா பரிதாபாத் மாவட்டத்தில் பல்லப்கர் ரெயில் நிலையத்தில் எப்போதும் போல அன்றும் கூட்டம் இல்லை. 2 வயது குழந்தை னது 14 வயது சகோதரனுடன்,ரெயில்வே பிளாட்பாமில்  விளையாடி கொண்டிருந்தான்.
          
சிறிது நேரம் கழித்து அந்த சிறுவனின் சகோதரன் வெளியே சென்று விட்டான்.  2வயது சிறுவன் தெரியாமல் தண்வாளத்தில் குதித்து விட்டான். அந்த நேரம் பார்த்த அந்த தண்டவாளத்தில்  சரக்கு ரெயில் ஒன்று வந்தது.  அந்த நேரத்தில் பைலட் திவான் சிங் மற்றும் அவரது உதவியாளர் அதுல் ஆனந்த் ஆகியோர் இரண்டு வயது குழந்தையின் மீது சரக்கு ரெயில் ஓடிக்கொண்டிப்பதை கவனித்தார்கள்.

அவர்கள் அவசரகால பிரேக்குகளைப் பயன்படுத்தி ரெயிலை நிறுத்த விரைந்தனர். ஆனால் ரெயில்  சிறுவனைக் கடந்து சென்ற பின்னரே நின்றது. அச்சத்துடன் திவான் மற்றும் அதுல் ரெயிலிலிருந்து வெளியே குதித்து சந்தேகத்துடன் அந்த குழந்தை உயிருடன் இருக்கிறதா என்று பார்த்தனர். ஆனால் அதிசயமாக அந்த குழந்தை காயம் கூட அடையவில்லை. அனைவருக்கும் ஆச்சரியம் சிறுவன் எசகுபிசகாக சிக்கி  உயிர் தப்பி உள்ளான்.

Next Story