காஷ்மீரில் செயலகத்தில் பணியில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்


காஷ்மீரில் செயலகத்தில் பணியில் இருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்
x
தினத்தந்தி 25 Sept 2020 7:59 AM IST (Updated: 25 Sept 2020 7:59 AM IST)
t-max-icont-min-icon

தெற்கு காஷ்மீரில் உள்ள செயலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது பயங்கரவாதிகள் சிலர் திடீர் தாக்குதலை நடத்தி உள்ளனர்.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் தெற்கு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள செயலகத்தில் பாதுகாப்பு பணிக்காக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், அந்த பகுதிக்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது திடீரென தாக்குதலில் ஈடுபட்டிருக்கின்றனர்.  இதனை தொடர்ந்து போலீசாரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.  அவர்கள் அந்த பகுதியை தங்களது வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.  எனினும் இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

இதேபோன்று, நேற்று நடந்த சம்பவமொன்றில் பயங்கரவாதிகள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.  ஏ.கே. ரக துப்பாக்கி ஒன்றையும் பறித்து கொண்டு தப்பியோடினர்.

இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.  இந்நிலையில், மற்றொரு தாக்குதல் சம்பவம் இன்று காலை நடந்துள்ளது.

Next Story