புதுச்சேரியில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; ஜிப்மர் மருத்துவமனை ஆய்வில் தகவல்
புதுச்சேரியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கொரோனா பாதிப்புகளால் 481 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல் மந்திரி நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
புதுச்சேரியில் மொத்த கொரோனா பாதிப்புகள் 24,227 ஆக உள்ளன. இதுவரை 18,893 பேர் குணமடைந்து சென்றுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வொன்றில் கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் விஞ்ஞானிகள் நடத்திய இரண்டாவது ஆய்வில், 698 நபர்கள் பங்கேற்றனர். அவர்களில் நோய் தொற்று எதிர்ப்பு திறன் 20.7% பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்றின் தாக்கம், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஏறத்தாழ சமமாக உள்ளது. ஆண்களில் 21.4 சதவீதமாகவும், பெண்களில் 20 சதவீதமாகவும் உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story