தேசிய செய்திகள்

இந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் + "||" + Our Cultural World A Lot Poorer": PM Modi On SP Balasubrahmanyam's Death

இந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது- எஸ்.பி.பி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

இந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது-  எஸ்.பி.பி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்
இந்திய இசை உலகம் மெல்லிசை குரலை இழந்துவிட்டது என ஜனாதிபதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  கடந்த 51 நாட்களாக  பெற்று வந்த  எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்று பிற்பகல் மரணம் அடைந்தார். எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு திரையுலகத்தினரை கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது.

எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அவரது ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில், “

 உடல்நிலை மீண்டும் திடீரென்று நேற்று மோசம் அடைந்தது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நலம் பெற்று மீண்டு வருவார் என ரசிகர்கள், திரையுலகினர் எதிர்பார்த்துக்கொண்டிருந்த வேளையில்,  பேரிடியாக அவரது மறைவு செய்தி வந்தது.  இன்று பிற்பகல் 1.04 மணிக்கு எஸ்.பி பாலசுப்பிரமணியம் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.  எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவு செய்தி, அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 பாலசுப்பிரமணியம் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ ஸ்.பி.பி.-ஐ இழந்ததன் மூலம் இசை உலகமும், கலாச்சார உலகமும் ஏழையாகிவிட்டது. பல ஆண்டுகளாக எல்லா வீடுகளிலும் ஒலித்துவந்த குரல் அடங்கிவிட்டது. குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மெல்லிசை குரல் மூலம் என்றென்றும் நம் நினைவுகளில் நிறைந்திருப்பார் என்று உள்துறை  அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது எஸ்.பி.பி. உடல்
அஞ்சலி செலுத்த பொதுமக்கள் திரண்டு வருவதால் தாமரைப்பாக்கம் வீட்டிற்கு எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் கொண்டு செல்லப்படுகிறது.
2. நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி
நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி. உடலுக்கு திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
3. எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு : பிற மாநில முதல்வர்கள் இரங்கல்
பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக முதல்வர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
4. எஸ்.பி.பி.யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது- பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு
எஸ்.பி.பி.யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது