அடுத்த 6 மாதங்களுக்கு மத்திய அரசு ரூ.4¼ லட்சம் கோடி கடன் வாங்குகிறது


அடுத்த 6 மாதங்களுக்கு மத்திய அரசு ரூ.4¼ லட்சம் கோடி கடன் வாங்குகிறது
x
தினத்தந்தி 1 Oct 2020 12:28 AM IST (Updated: 1 Oct 2020 12:28 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த 6 மாதங்களுக்கு மத்திய அரசு ரூ.4¼ லட்சம் கோடி கடன் வாங்க உள்ளது.

புதுடெல்லி,

நடப்பு நிதியாண்டில் ரூ.12 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான, நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.7 லட்சத்து 66 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தது.

இந்தநிலையில், கொரோனா தொடர்பான செலவினங்களுக்காக, மீதி உள்ள 6 மாதங்களுக்கு மத்திய அரசு ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் கோடி கடன் வாங்க உள்ளது. வெளிநாடுகளில் கடனாகப் பெற உள்ளது.

இத்தகவலை மத்திய அரசின் பொருளாதார விவகார செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்தார்.

 கொரோனா பெருந்தொற்று உலகெங்கிலும் உள்ள அரசாங்க நிதிநிலைகளை மோசமாக பாதித்துள்ளது. அதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story